Published : 05 Sep 2019 07:23 AM
Last Updated : 05 Sep 2019 07:23 AM

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை: கணவர், மகள்கள் திறந்து வைத்தனர்

புதுடெல்லி

சிங்கப்பூரிலுள்ள மேடம் துஸாட் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அவரது கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் திறந்துவைத்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு படங் களைத் தொடர்ந்து பாலிவுட்டில் நுழைந்தார். அங்கு ஏராளமான இந்திப் படங்களில் நடித்து புகழ் பெற்றார். புகழின் உச்சியில் இருக்கும்போதே இந்தித் திரைப் படத் தயாரிப்பாளர் போனி கபூரை மணந்த பின்னர் மும்பையில் வசித்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு துபாய் சென்றிருந்தபோது அங் குள்ள ஒரு ஓட்டல் குளியல் தொட்டியில் தவறிவிழுந்து இறந் தார். இதனிடையே சிங்கப்பூரி லுள்ள புகழ்பெற்ற மேடம் துஸாட் டின் மெழுகுச் சிலை அருங் காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகுச் சிலை வைக்கப் பட்டுள்ளது.

இந்த சிலையை நேற்று போனி கபூர், நடிகைகள் ஜான்வி, குஷி கபூர் ஆகியோர் திறந்துவைத்தனர். 1987-ல் வெளியான மிஸ்டர் இந்தியா படத்தில் இடம்பெற்ற ‘ஹவா ஹவாயி’ பாடலில் வரும் ஸ்ரீதேவியைப் போன்ற உடையலங் காரம், தலையலங்கார பாணியில் தத்ரூபமாக சிலை உருவாக்கப் பட்டுள்ளது.

இது ஸ்ரீதேவியின் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. சிலை யைத் திறந்துவைக்கும் நிகழ்ச்சி யின் படங்களை போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “ஸ்ரீதேவி எப்போதும் நம் இதயங்களில் வாழ்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் உள்ள மேடம் துஸாட் மெழுகுச்சிலை அருங்காட்சியகத் தில் நடிகைகள் தீபிகா படுகோன், கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா, இயக்குநர் கரண் ஜோஹர், நடிகர்கள் மகேஷ் பாபு, அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரது சிலைகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x