திரைப்படமாகும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை

திரைப்படமாகும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை
Updated on
1 min read

மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜக தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.

பாஜகவை நிறுவியவர்களில் ஒருவர் வாஜ்பாய். மூத்த தலைவரான இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 -ம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார். அமாஷ் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம், ’தி அண்டோல்ட் வாஜ்பாய்’ என்ற புத்தகத்தின் உரிமையை வாங்கியுள்ளனர்.

வாஜ்பாய் வாழ்க்கையில் சிறிய வயதில் நடந்த சம்பவங்கள், கல்லூரி வாழ்க்கை, அரசியல்வாதியாக ஆனது போன்ற விஷயங்கள் இந்தப் படத்தில் சொல்லப்படவுள்ளன.

"தி அண்டோல்ட் வாஜ்பாய் நான் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று. அதிக கவனம் பெறாத ஒரு நாயகனைப் பற்றி பெரிய திரையில் சொல்லும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு பெருமை மற்றும் மகிழ்ச்சி. இந்த புத்தகத்தைப் படிக்கும் போது அவருடைய ஆளுமை பற்றி நிறைய தெரிந்தது. நம் நாட்டுக்கு அவர் பிரதமராக இருந்த போது செய்த பணிகள் பற்றித் தெரிந்தது" என்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிவ சர்மா.

மற்றொரு தயாரிப்பாளரான ஸீஷான் அஹமத் பேசுகையில், "படத்தின் திரைக்கதை எழுதி முடித்ததும் இயக்குநர் மற்றும் நடிகர்களை இறுதி செய்வோம். தி அண்டோல்ட் வாஜ்பாய் தான் இப்போதைக்கு படத்தின் தலைப்பு" என்றார்.

- ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in