

நடிகை இலியானாவும் அவரது நீண்ட நாள் காதலர் ஆண்ட்ரூ நீபோனும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர் இலியானா. தமிழில் விஜய்யுடன் 'நண்பன்' படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட்டிலும் 'ருஸ்தம்', 'பர்ஃபி' உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர். இவரும், புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
இன்ஸ்டாகிராமில் இருவரும் இணைந்து இருக்கும் பல புகைப்படங்களை இலியானா இதற்கு முன் பகிர்ந்துள்ளார். ஆனால் தற்போது இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளனர். மேலும் இருவரும் இருக்கும் அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையை நினைத்து பயமாக இருக்கிறது என்றும், கிசுகிசுக்களுக்கு தான் பலியாக விரும்பவில்லை என்றும் ஒரு பேட்டியில் இலியான குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.