Published : 09 Aug 2019 04:28 PM
Last Updated : 09 Aug 2019 04:28 PM

66-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ்; ‘அந்தாதூன்’,  ‘மஹாநடி’ ’கே.ஜி.எஃப்’ படங்களுக்கு விருது - தமிழுக்கு 1 விருது மட்டுமே!

66-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரங்களை அறிவித்தார் நடுவர்களின் தலைவர் ராகுல் ரவைல். 31 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் உத்தராகண்ட் மாநிலம் விருதை தட்டிச் சென்றது.

முழு விருதுப் பட்டியல் இதோ:

சிறந்த கல்வித் திரைப்படம்: சரளா விரளா

சிறந்த ஆக்‌ஷன் படம்: கேஜிஎஃப் (கன்னடம்)

சிறந்த நடன அமைப்பு: பத்மாவத், குமார்

தாதா சாஹேப் பால்கே விருது:

ஃபீச்சர் பிலிம் அல்லாத சிறந்த படம்: விபா பக்‌ஷியின் சன் ரைஸ் மற்றும் தி சீக்ரெட் லைஃப் ஆஃப் ஃப்ராக்ஸ், அஜய் & விஜய் பேடி

சிறந்த இயக்குநர்: யுரி - ஆதித்ய தார்

சிறந்த திரைப்படம்: ஹெல்லாரோ, குஜராத்தித் திரைப்படம், இயக்கம்: அபிஷேக் ஷா

சிறந்த நடிகர்: அந்தாதூன் படத்தின் ஆயுஷ்மான் குராணா, யுரியின் விக்கி குஷால்

சிறந்த நடிகை: மஹாநடி - கீர்த்தி சுரேஷ்

சிறந்த துணை நடிகர்: ஸ்வானந்த் கிர்கிரே- படம் கும்பக்

சிறந்த துணை நடிகை: பாத்ஹை ஹோ-வின் சுரேகா சிக்ரி

சிறந்த ஆக்‌ஷன் பட இயக்கம்: கேஜிஎஃப் அத்தியாயம் 1

தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம்: ஒன்றல்ல இரடல்ல (கன்னடம்)

சிறந்த வெகுஜனப் படம்: பத்ஹாய் ஹோ

சிறந்த அறிமுக இயக்குநர் படம்: நான்

சிறந்த சமூகத் திரைப்படம்: பத்மன்

சிறந்த ஒளிப்பதிவு: உல்லு (மலையாளம்)

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்: கேஜிஎஃப்

சுற்றுச்சூழல் காப்பு பற்றிய சிறந்த திரைப்படம்: பானி

சிறந்த பிராந்திய மொழிப்படங்கள்:

தமிழ்: பாரம்

ராஜஸ்தானி: டர்ட்டில்

பஞ்செங்கா: இன் த லேண்ட் ஆஃப் பாய்சனஸ் உமன்

மராத்தி: போங்கா

ஹிந்தி: அந்தாதூன்

தெலுங்கு: மஹாநடி

அசாமிய மொழி: புல்புல் கேன் சிங்

பஞ்சாபி: அர்ஜேதா.

இசை:

சிறந்த பாடல்: நதிச்சிரமி (கன்னடம்)

சிறந்த இசையமைப்பு (பாடல்கள்): சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்)

சிறந்த இசையமைப்பு ( பின்னணி இசை): யுரி

சிறந்த ஒலியமைப்பு: யுரி

சிறந்த பின்னணிப் பாடகி: மயவி மனவே கன்னடப் படத்துக்காக பிந்து

சிறந்தப் பின்னணிப் பாடகர்: அரிஜித் சிங், படம்: பிந்த்தே தில்

தயாரிப்பு:

சிறந்த மேக்-அப் கலைஞர்: Awe

சிறந்த தயாரிப்பு: குமார சம்பவம் (மலையாளம்)

சிறந்த ஆடை வடிவமைப்பு: மஹாநடி(தெலுங்கு)

சிறந்த அசல் திரைக்கதை: சி லா சவ்

சிறந்த தழுவல் திரைக்கதை: அந்தாதூன்

சிறந்த வசனம்: தாரிக்

சிறந்த குழந்தைகள் படம்: சர்க்காரி அரியா பிரதமிக ஷாலி காசர்கோட்

சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்: பி.வி. ரோஹித் (கன்னடம்), சமீப் சிங் (பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரோஹி (உருது), ஸ்ரீனிவாஸ் போகலே (மராத்தி)

சிறந்த சினிமாட்டோகிராபி: ஒலு, மலையாளம், எம்.ஜே.ராதாகிருஷ்ணன்

சிறப்பு நடுவர் விருதுகள்: ஸ்ருதி ஹரிஹரன், ஜோஜு ஜார்ஜ்- ஜோசப், சுதானி ஃப்ரம் நைஜீரியாவுக்காக சாவித்ரி, சந்த்ரசூட் ராய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x