திருமணமானதை உறுதி செய்த ராக்கி சாவந்த்: லண்டன் தொழிலதிபரை மணந்தார்

ராக்கி சாவந்த் | கோப்புப் படம்
ராக்கி சாவந்த் | கோப்புப் படம்
Updated on
1 min read

தொலைக்காட்சி நட்சத்திரம் ராக்கி சாவந்த் தனக்குத் திருமணமானதை உறுதி செய்துள்ளார். லண்டனில் இருக்கும் தொழிலதிபரை மணந்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் திருமண அலங்காரத்துடன் ராக்கி புகைப்படங்கள் பகிர்ந்து வந்தார். திருமணமாகிவிட்டதா என்று பலரும் கேட்டதற்கு "அது ஃபோட்டோ ஷூட் படங்கள். 2020-ல் தான் திருமணம். இன்று எல்லா திருமணங்களும் முடியும் தேதியுடனே நடக்கின்றன. எனவே நான் அதுகுறித்து பயத்துடன் தான் இருக்கிறேன்" என்று சொல்லிவந்தார்.

ஆனால், தற்போது குடும்பத்தினர் மட்டும் பங்குகொண்ட திருமண வைபவம் நடந்து முடிந்துவிட்டதென்று ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் பயத்தில் இருந்தேன். எனக்குத் திருமணமாகிவிட்டது. இப்போது அதை உங்களிடம் உறுதி செய்கிறேன். அவர் பெயர் ரிதேஷ். லண்டனில் இருக்கிறார். அவர் திருமணம் முடிந்து அங்கு சென்றுவிட்டார். எனது விசா வந்தவுடன் நானும் சென்றுவிடுவேன். 

இந்தியாவில் வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாகத் தொடர்ந்து பணிபுரிவேன். எனக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்க ஆசை. எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகவுள்ளது என நினைக்கிறேன். அற்புதமான கணவரைத் தந்ததற்கு ஏசுவுக்கு நன்றி. பிரபு சாவ்லாவுடனான எனது முதல் பேட்டியிலிருந்தே ரிதேஷ் என் ரசிகர். என்னிடம் வாட்ஸ் அப்பில் பேசி வந்தார். தொடர்ந்து உரையாடினோம். நண்பர்களானோம். 

இது ஒன்றரை வருடங்களுக்கு முன் நடந்தது. அவரை நன்றாகத் தெரிந்த பிறகு அவரது மனைவியாகவேண்டும் என்று ஏசுவிடம் கடுமையாக பிரார்த்தனை செய்தேன். அது இப்போது நிறைவேறிவிட்டது. கடவுள் இதுவரை என்னிடம் கருணையாகவே இருந்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in