'வீரம்' ரீமேக்கில் அக்‌ஷய் குமார்: 2020-ல் வெளியீடு

'வீரம்' ரீமேக்கில் அக்‌ஷய் குமார்: 2020-ல் வெளியீடு
Updated on
1 min read

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடித்த 'வீரம்' படத்தின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு 'பச்சன் பாண்டே' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

2014 பொங்கல் வெளியீடாக வந்து வெற்றி பெற்ற படம் 'வீரம்'. அஜித் குமார், தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஏற்கெனவே தெலுங்கில் 'காட்டமராயுடு' என்ற பெயரில் பவன் கல்யாண் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், தெலுங்கில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெள்ளிக்கிழமை வெளியானது. கருப்பு லுங்கி, கழுத்தில் தங்கச் சங்கிலிகள் ஜொலிக்க கையில் நுன்சாக் ஆயுதத்துடன் அக்‌ஷய் குமார் நிற்பது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கும் இந்தப் படத்தில் சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். 2020 கிறிஸ்துமஸ் வார இறுதியில் இந்தப் படம் வெளியாகும் என்று தெரிகிறது. அதே நாளி ஆமிர் கானின் ’லால் சிங் சட்டா’ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அக்‌ஷய் குமாரின் முந்தைய படம் கேசரி. தற்போது 'மிஷன் மங்கள்' படத்தின் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார். 'வீரம்' கன்னட மொழியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in