

ராதிகா ஆப்தே நடித்துள்ள படத்தின் நெருக்கமான காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.
ராதிகா ஆப்தே 'தி வெட்டிங் கெஸ்ட்' என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகன் தேவ் படேலுடன் அவர் நெருக்கமாக உள்ள காட்சிகள் இணையத்தில் கள்ளத்தனமாக பதிவேற்றப்பட்டுள்ளன.
"இந்த காட்சிகளில் நானும், தேவ் படேலும் இருக்கிறோம். ஆனால் என் பெயரை வைத்து மட்டுமே இதைப் பரப்புகிறார்கள். ஏன் தேவ் படேல் என்கிற ஆண் நடிகரின் பெயரை அதில் சேர்க்கவில்லை. படத்தில் பல அழகான காட்சிகள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு பாலியல் உறவுக் காட்சி லீக் ஆகியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சமூகத்தின் மோசமான மனநிலையே" என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
இது போன்ற சூழ்நிலை ராதிகாவுக்குப் புதிதல்ல. 2016-ல், 'பார்ச்ட்' படத்தில் உசைனுடன் ராதிகா தோன்றிய ஒரு நெருக்கமான காட்சி இணையத்தில் லீக் ஆகி வைரலானது. அனுராக் காஷ்யப்பின் குறும்படத்தில் ராதிகா நிர்வாணமாகத் தோன்றிய காட்சியும் லீக் ஆனது. ஆனால் இப்படி உருவாக்கப்படும் சர்ச்சைகளை துணிச்சலாக எதிர்கொண்டு வருகிறார் ராதிகா