

எனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு செயல்பாட்டில் இருப்பதால் ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் (72) கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில், “எனது பெயருக்குப் பிறகு ‘சரியானது’ (டிக்) என்பதற்கான குறியீடு உள்ள கணக்குதான் என்னுடையது. அந்தக் குறியீடு இல்லாத கணக்கு போலியானது. குறிப்பாக, @SrBachchanc என்ற (பெயருக்குப் பிறகு ‘சி’) கணக்கு என்னுடையது அல்ல. அதனுடன் ரசிகர்கள் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.
அமிதாப் பச்சன் பெயரில் பல போலி கணக்குகள் ட்விட்டரில் உலா வருவதாகக் கூறப்படுகிறது.