இனவெறியைத் தூண்டும் விளம்பரத்தில் நடிப்பதா?- ஐஸ்வர்யா ராய்க்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

இனவெறியைத் தூண்டும் விளம்பரத்தில் நடிப்பதா?- ஐஸ்வர்யா ராய்க்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்
Updated on
1 min read

நகைக்கடைக்கான விளம்பரத்தில் இனவெறியை தூண்டும் வகையில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பதாக அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக் குரல் பதிவு செய்து வருகின்றனர்.

சர்ச்சைக்குள்ளான அந்த விளம்பரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நகை அலங்காரத்தில் ஜொலிக்க அவருக்கு அருகே ஒரு கறுப்பினக் குழந்தை குடையை உயர்த்திப் பிடித்தபடி நிற்பதுபோல் உள்ளது.

இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் இன வெறியை தூண்டும் வகையில் நடித்துள்ளதாகவும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஆதரிப்பதுபோல் நடந்து கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக ஐஸ்வர்யா ராய்க்கு சமூக ஆர்வலர்கள் சிலர் கடிதம் எழுதியுள்ளனர். அதில், ஐஸ்வர்யா உடனடியாக அந்த விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in