

பிரபல நடிகை ரதி அக்னிஹோத்ரி, மும்பை வொர்லி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு அளித்துள்ள புகாரில், தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார். “இந்தத் தம்பதியருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது. தொழிலில் நஷ்டம் அடைந்த பிறகு ரதியை அவரது கணவர் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்” என்று போலீஸார் கூறினர்.