ரூ. 41 கோடியில் வீடு வாங்கும் அபிஷேக் பச்சன்

ரூ. 41 கோடியில் வீடு வாங்கும் அபிஷேக் பச்சன்
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகர் அபிஷேக் பச்சன், மும்பை வொர்லி பகுதியில் உருவாகி வரும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ. 41.14 கோடி மதிப்பில் வீடு வாங்குவதற்காக பதிவு செய்துள்ளார்.

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பணத்தை வீடுகள், மனைகளில் முதலீடு செய்வது இந்தித் திரை யுலக நட்சத்திரங்களின் வழக்கமாகி விட்டது. வொர்லி பகுதியில் அபிஷேக் பச்சன் வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பின் விலை சதுர அடி ரூ. 1.06 லட்சமாகும். 3,875 சதுர அடியிலான குடியிருப்பை அவர் வாங்குகிறார்.

வொர்லி பகுதியில் பிரதானமான அன்னி பெசன்ட் சாலையில் அமையும் ஸ்கைலார்க் டவரில் 37-வது தளத்தில் இந்த குடியிருப்பு உள்ளது. 5 படுக்கை அறை கொண்ட இந்த வீடு பல்வேறு நவீன சொகுசு வசதிகளைக் கொண்டது. இரு கட்டிடங்களாக ஸ்கைலார்க் கட்டப்படுகிறது. ஒவ்வொன்றும் 67 தளங்களை கொண்டது. ஒயாசிஸ் ரியால்டி நிறுவனம் இதை அமைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in