எதிர்மறையாகப் பேசுபவர்களின் மனநிலையே அதுதான்: கவர்ச்சிப் புகைப்படங்கள் பற்றி ஈஷா குப்தா

எதிர்மறையாகப் பேசுபவர்களின் மனநிலையே அதுதான்: கவர்ச்சிப் புகைப்படங்கள் பற்றி ஈஷா குப்தா

Published on

தனது கவர்ச்சியான புகைப்படங்களுக்கு வரும் எதிர்மறை விமர்சனங்களை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என நடிகை ஈஷா குப்தா கூறியுள்ளார்.

நடிகை ஈஷா குப்தா, கடந்த வாரம் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தனது அதிக கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்தார். அவை ஆபாசமாக இருப்பதாக சிலர் அவரை வசை பாட ஆரம்பித்தனர்.

இதுபற்றி தற்போது பேசியுள்ளா ஈஷா, "ஆண்கள் தங்கள் மீது நம்பிக்கையாக இருக்கும்போது, அதை வெளிப்படுத்தும்போது யாரும் அவர்களை கேள்வி கேட்பதில்லை. ஆனால் பெண்கள் வலிமையாக, தங்களுக்காக பேசும்போது, சில ஆண்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

உலகில் கவலை கொள்ளும் வகையில் இன்னும் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ஏன் எனது புகைப்படங்கள் சிலரை கவலையடையச் செய்கிறது என என்னால் என்ன புரிந்து கொள்ள முடியவில்லை.

புகைப்படங்களுக்கு வந்த எதிர்மறையான பின்னூட்டங்கள் பற்றி எனக்கு கவலையில்லை. உலகமே தாழ்ந்து வருகிறது. அதுவும் குறிப்பாக நமது தேசம். எனது புகைப்படத்துக்கு வந்த சில கருத்துகளைப் பார்த்து நன்றாக சிரித்தேன். ஆனால் அவர்களைப் பார்த்து பாவப்படுகிறேன் ஏனென்றால் அதுதான் அவர்கள் மனநிலை.

நட்சத்திரங்கள் வெளிப்படையாகப் பேசாத போது அவர்களைக் கோழை என நினைக்கும் மக்கள், நாங்கள் பேசும்போது வேறு ஏதாவது சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? சில விஷயங்கள் என்னைப் பாதித்தால் அதைப் பற்றி பேசுவேன் " என்று கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in