எனது இளமைக்குப் பின் எந்த அறிவியலும் இல்லை: அக்‌ஷய் குமார்

எனது இளமைக்குப் பின் எந்த அறிவியலும் இல்லை: அக்‌ஷய் குமார்
Updated on
1 min read

எளிமையாக, மகிழ்ச்சியாக இருப்பதே தனது இளமையின் ரகசியம் என நடிகர் அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 50-வது வயதில் அடியெடுத்து வைக்கப்போகும் நடிகர் அக்‌ஷய் குமார், தனது அடுத்த படத்தில் பூமி பெட்னேகருடன் நடித்துள்ளார். அவரது இளமையான தோற்றம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "என் வாழ்க்கையில் எனக்கிருக்கும் ஒரே பணி நடிப்பது. பிறகு எனது குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது, உடற்பயிற்சி செய்வது. அவ்வளவுதான்.

எனக்கு மன அழுத்தம் இல்லை. நான் அதிக அழுத்தத்தை எடுத்துக்கொள்வதும் இல்லை. மகிழ்ச்சியாக இருப்பதில் கவனம் செலுத்துவேன். உடற்பயிற்சி செய்வேன். சரியாக சாப்பிடுவேன், கட்டுப்பாடுடன் இனிப்புகள் எடுத்துக் கொள்வேன். இதில் எந்த அறிவியலும் இல்லை. எளிமையான, எளிதான வாழ்க்கையை வாழுங்கள். போதும். நான் சாந்தினி சவுக் பகுதியில் இருந்த போது ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் 22 நபர்கள் வாழ்ந்தோம். ஆனால் அதில் மகிழ்ச்சியாக இருந்தோம். தொடர்ந்து அதே இன்பத்துடன் வாழ்கிறோம். " என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in