

ட்விட்டரில் அநாகரீகமான வீடியோ ஒன்றை பகிர்ந்ததால் நடிகர் ரிஷி கபூருக்கு எதிராக வழக்கும், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, சிறுவர்கள் சிலர் இருக்கும் வீடியோ ஒன்றை ரிஷிகபூர் பகிர்ந்தார். அது அநாகரீகமாக இருப்பதால் அரசு சாரா அமைப்பொன்றின் தலைவர், ட்விட்டரிலேயே ரிஷி கபூருக்கு எதிராக புகாரளித்துள்ளார். பாந்த்ரா கிழக்குப் பிரிவின் சைபர் போலீஸிடம் இந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெய் ஹோ என்ற அரசு சாரா அமைப்பின் தலைவர் அஃப்ரோஸ் மாலிக் ரிஷி ரிஷி கபூருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
சிறு குழந்தையின் அநாகரீகமான, நிர்வாண, ஆபாசமான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தமைக்காக, போஸ்கோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்) மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இணைத்து அவர் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
மேலும், "ரிஷிகபூரை ட்விட்டரில் 2.6 மில்லியன் மக்கள் தொடர்கின்றனர். அப்படியென்றால அவர் பகிருந்த இந்த ஆபாச வீடியோ 2.6 மில்லியன் முறை சுற்றி வந்துள்ளது" என்று குறிப்பிடுள்ளார்.