பாலிவுட்டில் களமிறங்கும் கனடிய பாடகர் நோஃபெல் ஐஸ்

பாலிவுட்டில் களமிறங்கும் கனடிய பாடகர் நோஃபெல் ஐஸ்
Updated on
1 min read

பிரபல கனடிய பாடகர் நோஃபெல் ஐஸ் வரும் மார்ச் 2018ல் புதிய படம் மொன்றில் நடிக்கிறார். அப்படத்தின் இயக்குநர் பொறுப்பையும் அவர் ஏற்றுள்ளார்.

இந்தியாவின் சுரேஷ் தாமஸ் தலைமையில் இயங்கிவரும் கிரெஸெண்டோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளராகவும் இணைகிறார் நோஃபெல்.

இதுபற்றி நோஃபெல் ஐஸ் கூறியதாவது:

நான் இயக்கவுள்ள இப்படம் 90 நிமிடங்களைத் தாண்டாது. இப்படத்தின் நாயகி ஒரு பிரபல நடிகை. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்றவர்கள் புதிய அறிமுகங்கள் மற்றும் நாடகக் கலைஞர்களாக இருப்பார்கள்.

இந்தியாவில் நம்பமுடியாத அளவுக்கு திறமைசாலிகள் உள்ளனர். முதல் வெற்றியைப் பெற நான் கடின உழைப்பை மேற்கொண்டது போல இந்தக் கலைஞர்களுக்கும் அத்தகைய ஒரு வாய்ப்பையும் தளத்தையும் தர வேண்டும்.

கலைப்படங்களின் சகாப்தமாகத் திகழ்ந்த 1990கள்தான் இப்படத்தின் களம். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் ஒரு குடும்பத்தில் ஏழு குழந்தைகள் காணாமல் போய்விட, குழந்தைகளையும் அதற்குக் காரணமான குற்றவாளியையும் கண்டுபிடிக்க அக்குடும்பம் எடுக்கும் முயற்சிகள் சுவாரஸ்யமாக சொல்லப் படவுள்ளன.

வழக்கமான படங்களிலிருந்து இப்படம் மாறுபட்டிருக்கவேண்டுமென விரும்புகிறேன்'' என்று தெரிவித்த நோஃபெலின் புதிய ஆல்பம் ஒன்றும் வெளியாக உள்ளது.

புதிய ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள ''அல்லா ஜண்டா'' எனும் பாடலில் பிரபல பாகிஸ்தான் பாடகர் ரஹத் ஃபதே அலி கானோடு கரம் கோர்த்துள்ள நோஃபெல், அவரைப் பற்றி கூறுகையில், ரஹத்துடன் இணைந்து பணியாற்றுவது எனது நீண்டநாள் கனவு. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் உண்மையான மேதை'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in