

அமிதாப் பச்சன் குடும்பத்தினர் வருமான வரியாக 53.81 கோடி ரூபாய் கட்டியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அதிக வரி செலுத்துபவர்கள் பட்டியலில் இருக்கிறார் அமிதாப் பச்சன்.
2012 - 13 ஆண்டிற்காக அமிதாப் பச்சன் சுமார் 25 கோடி ரூபாய் வரிகட்ட வேண்டிருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் அவருடைய வருமானத்தின்படி 37 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என்று கணக்கிடப்பட்டது.
மும்பை பகுதியில் அதிக வரி செலுத்துபவர் அமிதாப் பச்சன் என்பதால் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
2012-2013 ஆண்டிற்காக, அமிதாப் குடும்பத்திலிருந்து மொத்தமாக 53.81 கோடி ரூபாய் வரியாக கட்டியிருக்கிறார்கள்.