இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் 1 கோடி: நடிகை பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி

இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் 1 கோடி: நடிகை பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி
Updated on
1 min read

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா கிராம் என பிரபலங்களைப் பின் தொடருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் ‘இன்ஸ்டாகிராமில்’ பாலிவுட் நடிகை தீபிகா படு கோனேவுக்கு அடுத்தபடியாக பிரியங்கா சோப்ராவை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டுள்ளது.

ஹாலிவுட் தொடரான ‘குவான்டிகோ’வில் நடிப்பதற் காக தற்போது நியூயார்க்கில் உள்ள பிரியங்கா சோப்ரா தன்னைப் பின்தொடரும் ரசிகர் களின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியதை அறிந்து ரசிகர் களுக்கு மனமார்ந்த நன்றி தெரி வித்துள்ளார். மேலும் ஒரு கோடி பேர் தன்னைப் பின்தொடர் வதைச் சுட்டிகாட்டும் விதமாக முகத்தில் அணியும் ‘கூலிங் கிளாஸ்’ கண்ணாடியில் 10 என்ற எண்ணைப் பொறித்து அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிரா மில் பதிவேற்றியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் பாலிவுட் நடிகை அலியா பட் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in