பிரிந்தது ரித்திக் ரோஷன் - சூசன் ஜோடி

பிரிந்தது ரித்திக் ரோஷன் - சூசன் ஜோடி
Updated on
1 min read

இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ரித்திக் ரோஷன் தனது மனைவி சூசனை பிரியப் போவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான 'க்ரிஷ் 3' படத்தின் மூலம் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் ரித்திக் ரோஷன். 2000-ம் ஆண்டு ரித்திக் ரோஷனுக்கும், சூசனுக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு Hrehaan மற்றும் Hridhaan என இரண்டு மகன்கள் உள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ரித்திக் ரோஷன், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், " என் மனைவி சூசன் எங்களது 17 வருட உறவினை முடிவிற்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளார். இது எங்களுக்கு மிகவும் கடுமையான காலகட்டமாக இருக்கும். இதனால் ஊடகங்களும், பொதுமக்களும் எங்களுக்குத் தனிமையை அளிக்கவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

’க்ரிஷ் 3’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் பாதிக்கப்பட கூடாது என்று தான் ரித்திக் ரோஷன் இந்த விஷயத்தை அறிவிக்காமல் இருந்தாராம். கடந்த 3 மாதங்களாக ரித்திக் ரோஷனை பிரிந்து, சூசன் அவரது தந்தை வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in