கமர்ஷியல் படங்கள் மறைந்து விடும் : சல்மான்கான்

கமர்ஷியல் படங்கள் மறைந்து விடும் : சல்மான்கான்
Updated on
1 min read

இன்னும் சில வருடங்களில் கமர்ஷியல் படங்கள் மறைந்து விடும் என்று கூறியிருக்கிறார் சல்மான்கான்.

'வாண்டட்', 'ரெடி', 'டபாங்', 'டபாங் 2', 'பாடிகார்ட்', 'ஏக் தா டைகர்' என கமர்ஷியல் படங்களுக்கு இந்தி திரையுலகில் அச்சாரம் போட்டவர் சல்மான்கான்.

இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலைத் தாண்டியதால் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வரத் தொடங்கினார்.

இந்தி திரையுலகில் ஒருபுறம் வித்தியாசமான கதை களங்கள் கொண்ட படங்கள் வெளியானலும், மறுபுறம் கமர்ஷியல் படங்கள் வருகையும் அதிகமாகியிருக்கிறது.

தொடர்ச்சியாக கமர்ஷியல் படங்களின் வருகை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சல்மான்கான் "கமர்ஷியல் படங்கள் ஒருகட்டத்தில் மெல்ல மெல்ல மறைந்து விடும். 'வாண்டட்', 'டபாங்' என அது ஒரு அற்புதமான களம்.

தற்போது தொடர்ச்சியான கமர்ஷியல் படங்களின் வருகையால், இந்த நிலை மாறி ஒரு கட்டத்தில் கமர்ஷியல் படங்கள் என்பது மறைந்து விடும். கமர்ஷியல் படங்கள் மக்களிடையே பிரபலமாக இருந்தாலும், படைப்பாளிகளின் கற்பனைத்திறனை அது குறைத்து விடுகிறது.

ஒரு மனிதன் 50 பேரை அடித்து பறக்கவிடுவது சினிமாவில் சகஜம். ஆனால் எதற்காக அடிக்கிறான் என்பதற்கு நல்ல காரணம் வேண்டும். அதுமட்டுமன்றி, சண்டைப்பயிற்சிகளின் முறை மாறவேண்டும்.

'ஜெய் ஹோ', 'கிக்', சூரஜ் பர்ஜாதியா இயக்கும் படம், பிரபுதேவா இயக்கும் படம் ஆகியவற்றில் நடிக்கிறேன். அனைத்துமே வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட படம் தான்."

பாக்ஸ் ஆபிஸ் கமர்ஷியல் ஹீரோ சல்மான்கானின் இந்த பேச்சால் கமர்ஷியல் இயக்குநர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in