வயிற்றில் குழந்தையுடன் ஒய்யார நடை: ‘லேக்மே பேஷன் வீக்’கில் நடந்தது மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது - நடிகை கரீனா கபூர் உருக்கம்

வயிற்றில் குழந்தையுடன் ஒய்யார நடை: ‘லேக்மே பேஷன் வீக்’கில் நடந்தது மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது - நடிகை கரீனா கபூர் உருக்கம்
Updated on
1 min read

‘‘கருவில் குழந்தையுடன் லேக்மே பேஷன் வீக்கில் பங்கேற்று ஒய்யார நடை நடந்த தருணம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது’’ என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் (34). இவரது கணவர் நடிகர் சயீப் அலி கான். கரீனா கபூர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலை யில் மும்பையில், ‘லேக்மே ’ அழகு சாதனைப் பொருட்கள் நிறுவனத் தின் சார்பில், ‘லேக்மே பேஷன் வீக்’ நடந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி நாளன்று கரீனா கபூர் ஒய்யார நடை நடந்து வந்தார். அந்த ஆடை அரச குடும்பத்து மணப்பெண் அணிவது போல் இருந்தது.

லேக்மே நிறுவனத்தின் விளம்பர தூதராக இருக்கும் கரீனா, பிரபல ஆடை வடிவமைப்பாளர் சபியா சச்சி வடிவமைத்த எம்பிராய்டரி செய்யப்பட்ட அழகிய ஆலிவ் பச்சை ஆடைகளை அணிந்து ஒய்யார நடை நடந்து பார்வையா ளர்களை ஆச்சரியப்படுத்தினார். இதுகுறித்து கரீனா கபூர் கூறிய தாவது:

இந்த பேஷன் வீக்கில் பங் கேற்றது மிகவும் மறக்க முடியாத ஒன்று. ஏனெனில், நான் மட்டும் இங்கு ‘ரேம்ப் வாக்’ நடந்து வர வில்லை. என்னுடைய கருவில் வளரும் குழந்தையும் பங்கேற்றது. முதல்முறையாக நானும் எனது குழந்தையும் என 2 பேரும் சேர்ந்து பேஷன் வீக் நிகழ்ச்சி யில் பங்கேற்றது மிகவும் உணர்ச் சிப்பூர்வமாக இருந்தது. இந்த நேரம் மிகச் சிறப்பானது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தான் இப்போது இருக்கிறேன்.

கரீனா மேலும் கூறுகையில், ‘‘பிரபல டிசைனர் சபியாசச்சியின் டிசைன்கள் மிக நேர்த்தியானவை. என்னுடைய மாமியார் கூட (ஷர்மிளா தாகூர்) சபியாசச்சியின் ஆடை வடிவமைப்பை மிகவும் விரும்புவார்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in