

'ஃபேன்டம்' கண்டிப்பாக வரவேற்பை பெறும் என அதன் தயாரிப்பாளர் நாடியாட்வாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹவுஸ் ஃபுல்,. ஹவுஸ் ஃபுல்2, அஞ்சனா அஞ்சானி, தேரி மேரி கஹானி உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்ட இந்தி படங்களைத் தயாரித்தவர் நாடியாட்வாலா.
தற்போது கபீர் கான் இயக்கத்தில் சைஃப் அலி கான், கத்ரீனா கைஃப் நடிக்கும் 'ஃபேன்டம்', அர்ஜுன் கபூர் நடிக்கும் '2 ஸ்டேட்ஸ்' மற்றும் சல்மான் கான் நடிக்கும் 'கிக்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறார்.
தயாரித்து வரும் படங்களில் முதலில் வெளியாக இருக்கும் 'ஃபேன்டம்' கண்டிப்பாக வரவேற்பை பெறும் என்று மிகுந்த நம்பிக்கை இருக்கிறார் நாடியாட்வாலா.
இது குறித்து, "கபீர் கான் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். சைஃப் அலிகான், கத்ரீனா கைஃப், கபீர் கான் மூவரும் முதல் முறையாக இணைந்திருப்பதால், இப்படம் கண்டிப்பாக வரவேற்பைப் பெறும்." என்று தெரிவித்திருக்கிறார் நாடியாட்வாலா.
சல்மான் கான் நடிப்பில் வெளியான 'ஏக் தா டைகர்' படத்தினைத் தொடர்ந்து 'ஃபேன்டம்' படத்தினை இயக்கி வருகிறார் கபீர் கான். இப்படமும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை தான்.
ஒவ்வொரு முறையும் தனது படங்களில் வித்தியாசமான இடங்களைக் காட்டும் கபீர் கான், இப்படத்திற்காக லெபனான் நாட்டின் தலைநகரான பீருட்டை தேர்ந்தெடுத்து, படப்பிடிப்பை நடத்திருக்கிறார்.