உத்தர பிரதேசத்தில் ராம் லீலாவிற்குத் தடை

உத்தர பிரதேசத்தில் ராம் லீலாவிற்குத் தடை
Updated on
1 min read

ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராம் லீலா' படத்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிக்க, சஞ்சாய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் 'ராம் லீலா'. இப்படத்திற்கு இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள், விமர்சகர்கள் என அனைவருமே புகழ்ந்திருக்கிறார்கள்.

அனைத்து இடங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு அலகாபாத் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

மரியாத புருஷோத்தம் பகவான் ராம்லீலா சமிதி என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், “’ராம் லீலா படத்திற்கு நவம்பர் 1ம் தேதி சென்சார் அதிகாரிகள் அளித்த சான்றிதழுக்கு தடை விதிக்க வேண்டும். படத்தில் சர்ச்சைகுரிய வசனங்களை நீக்க வேண்டும்.

படத்தில் இந்து மதத்தினரின் நம்பிக்கைகளை அவமதித்திருக்கிறார்கள். ஆகவே, படத்தினை தடை செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.

இவ்வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், உத்தர பிரதேசத்தில் 'ராம் லீலா' படத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in