இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரம் ராஜமெளலி: கரண் ஜோஹர் புகழாரம்

இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரம் ராஜமெளலி: கரண் ஜோஹர் புகழாரம்
Updated on
1 min read

எஸ்.எஸ்.ராஜமெளலி இந்த தேசத்தின் மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்ந்துவிட்டார் என்று கரண் ஜோஹர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். இப்படத்தின் இரண்டு பாகங்களின் உரிமையையும் வாங்கி வெளியிட்டவர் முன்னணி இயக்குநர் கரண் ஜோஹர்.

உலகளவில் 1500 கோடியைத் தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது 'பாகுபலி 2'. இப்படத்துக்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து இயக்குநர் கரண் ஜோஹர், "’பாகுபலி’ பற்றி பேசும்போது எனக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை. அது ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது.

எஸ்.எஸ்.ராஜமெளலி இந்த தேசத்தின் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்துவிட்டார். ஒரு இயக்குநராக அவரது வெற்றி அனைத்தையும் கடந்த ஒன்று என நினைக்கிறேன். நானும், எனது தயாரிப்பு நிறுவனமும் ’பாகுபலி’யில் பங்காற்றியது குறித்து பெருமையடைகிறேன். இந்த பயணத்தில் பங்குபெற்றதற்கு பெருமை கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் கரண் ஜோஹர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in