25 வருட ஆதரவுக்கு நன்றி: ரசிகர்களிடம் ஷாரூக் நெகிழ்ச்சி

25 வருட ஆதரவுக்கு நன்றி: ரசிகர்களிடம் ஷாரூக் நெகிழ்ச்சி

Published on

25 வருடங்களாக தனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் 25-ஆம் தேதி ஷாரூக் கான் நடிப்பில் வெளியான முதல் படமான தீவானா வெளியாகி 25 வருடங்கள் ஆனது.தனது இல்லத்தின் வெளியே கூடிய ரசிகர்களை தனது மகன் அப்ராமுடன் சந்தித்தார் ஷாரூக்.

அப்போது அவர், ”ஈகைப் பெருநாள் வாழ்த்துகள். எனது நாளை விசேஷமாக்கியதற்கு நன்றி. 25 வருடங்கள் இந்த அற்புதமான பயணத்தில் என்னுடன் இணைந்திருந்ததற்கு நன்றி" என்று கூறினார்.

ஷாரூக் பேசும் வீடியோ அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.

51 வயதான ஷாரூக் தற்போது ஜப் ஹாரி மெட் செஜல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்கா சர்மா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை இமிதியாஸ் அலி இயக்குகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in