டி.வி. நிகழ்ச்சியை பாராட்டி அமீர் கானுக்கு அமெரிக்க விருது!

டி.வி. நிகழ்ச்சியை பாராட்டி அமீர் கானுக்கு அமெரிக்க விருது!
Updated on
1 min read

ஹிந்தி நடிகர் அமீர் கானின் சத்தியமேவ ஜெயதே டி.வி. நிகழ்ச்சிக்கு அமெரிக்கா விருது வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் வெளிநாட்டு மீடியா விருது என்ற பெயரில் இப்போதுதான் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையே அந்த விருது இந்திய பிரபலத்துக்கு கிடைத்துள்ளது.

ஆஸ்கர் வென்ற இயக்குநர் கேத்தரீன் பிஜிலோ, அகிம்சைக்கான சர்வதே அமைப்பு, ஆமீர் கான் ஆகியோருக்கு கூட்டாக இந்த விருது அளிக்கப்பட்டது.

வாஷிங்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அமீர் கான் பங்கேற்றார். பொதுவாக விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் அமீர் கான் பங்கேற்பதும் இல்லை. விருதுகளைப் பெறுவதும் இல்லை. சத்தியமேவ ஜெயதே என்பது பிரபலமான டி.வி. விவாத நிகழ்ச்சியாகும். அமீர் கான் பங்கேற்ற முதல் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியும் இதுதான். ஹிந்தியில் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட 8 மொழிகளில் ஒளிபரப்பாகிறது. சமுக பிரச்னைகளை தலைப்பாகக் கொண்டு நிகழ்ச்சியில் விவாதம் நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in