துப்பறியும் வித்யா பாலன்!

துப்பறியும் வித்யா பாலன்!
Updated on
1 min read

முதன் முறையாக துப்பறியும் நிபுணராக நடிக்கவிருக்கிறார் வித்யா பாலன்.

'தி டர்ட்டி பிக்சர்', 'கஹானி', 'கஞ்சககார்' உள்ளிட்ட படங்களில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பல்வேறு விருதுகளை அள்ளியவர் வித்யா பாலன்.

யு.டிவி நிறுவனத்தின் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்துக்குப் பின்னும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

வித்யா பாலன் 'தி டர்ட்டி பிக்சர்', 'கஞ்சககார்' படங்களில் நடிப்பதற்காக தன் உடல் எடையைக் கூட்டினார்.

தற்போது பர்கான் அக்தருக்கு ஜோடியாக் 'Shaadi Ki Side Effects' படத்தில் நடிக்க, தன் உடல் இளைத்து நடித்து வருகிறார். இந்நிலையில், ‘பாபி ஜாஷோஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இப்படத்தில் துப்பறியும் நிபுணராக நடிக்கிவிருக்கிறார்.

இதற்காக, மீண்டும் உடல் எடையைக் குறைக்க திட்டமிட்டுருக்கிறார் வித்யா பாலன். இவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்து பல பாலிவுட் நாயகர்களே அசந்து போய்விட்டார்களாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in