சிக்ஸ் பேக்கில் கரீனா கபூர்!

சிக்ஸ் பேக்கில் கரீனா கபூர்!
Updated on
1 min read

'Shuddhi' என்னும் இந்தி படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்கவிருக்கிறார் கரீனா கபூர்.

இந்திய திரையுலகில் இதுவரை நாயகர்கள் சிக்ஸ் பேக் வைத்துத்தான் பாத்திருக்கிறோம். ஆனால் எந்த ஒரு நாயகியும் இதுவரை சிக்ஸ் பேக்கோடு நடித்ததில்லை.

முதன் முறையாக கிரண் மல்கோத்ரா இயக்கவிருக்கும் 'Shuddhi' படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க திட்டமிட்டு இருக்கிறார் கரீனா கபூர்.

'அக்னீபத்' படத்தினை வெற்றிகரமாக ரீமேக் செய்த கரண் மல்கோத்ரா இப்படத்தினை இயக்கவிருக்கிறார். ஹிரித்திக் ரோஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தினை தயாரிக்கிறார் இயக்குநர் கரண் ஜோஹர். டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கப் போகிறார்களாம்.

தற்போது இம்ரான் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்திருக்கும் 'Gori Tere Pyaar Mein' படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி அனைத்தையும் முடித்துவிட்டு, 'Shuddhi' படத்திற்காக தற்காப்பு கலைகளை கற்க திட்டமிட்டு இருக்கிறார் கரீனா கபூர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in