

ஆமிர்கான் நடிப்பில் வெளியான ’தங்கல்’ படம் 300 மில்லியன் டாலர்களை வசூலித்த 4-வது ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
ஆமிர்கான் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியான ’தங்கல்’ திரைப்படம் கடந்த மாதம் சீனாவில் வெளியானது. வெளியான நாளிலிருந்து பல சாதனைகளையும் படைத்து வருகிறது. அப்படி, ஞாயிற்றுக்கிழமை வசூலின் படி, உலகளவில் தங்கல் படம் 301 மில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது. (ரூ.1930 கோடி).
இதற்கு முன் ஆங்கிலம் அல்லாத 3 படங்கள் மட்டுமே 300 மில்லியன் டாலர் வசூலைத் தாண்டியுள்ளது.
தி மெர்மெய்ட் (சீனா) - 553 மில்லியன் டாலர்கள்
தி இன்டச்சபிள்ஸ் (பிரான்ஸ்) - 427 மில்லியன் டாலர்கள்
மான்ஸ்டர் ஹண்ட் (சீனா) - 386 மில்லியன் டாலர்கள்
யுவர் நேம் (ஜப்பான்) - 354 மில்லியன் டாலர்கள்
தங்கல் (இந்தியா) - 301 மில்லியன் டாலர்கள்