இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த பாலிவுட்

இந்தி சினிமா 2013 : பின்னியெடுத்த  பாலிவுட்
Updated on
1 min read

2013ல் இந்தி திரையுலகம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. நடிகர்கள், நடிகைகள், படங்கள் என தனித்தனியாக சாதித்து இருப்பது தான் சிறப்பு.

* ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படம் 216 கோடி வசூல் செய்து மலைக்க வைத்தது. ஆனால் வருட இறுதியில் அமீர்கானின் 'தூம் 3' 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. 400 கோடியைத் தொடும் என்று பாலிவுட் விமர்சகர்கள் கணித்திருக்கிறார்கள்.

* முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் 'The Great Gattsby' என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கால் பதித்தார். அது போலவே அனுபம் கேர் 'Silver Linings Playbook' என்ற படத்தின் மூலமாக ஹாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்தார்.

* 'Yeh Jawaani Hai Deewani', 'Bhaag Milkha Bhaag', 'Krrish 3, 'Goliyon Ki Raasleela Ram—Leela', 'Chennai Express', 'Dhoom 3' உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதிலும், 'Krrish 3', 'Chennai Express', 'Dhoom 3' ஆகிய படங்களின் வசூல் 200 கோடியை தாண்டியது.

* இந்தி படங்கள் பெரு, பனாமா, மொராக்கோ உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாயின. 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தை இதுவரை இந்தி படங்கள் திரையிடப்படாத நாடுகளிலும் வெளியிட்டு சாதனை படைத்தார்கள்.

* வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களான 'The Lunch Box', 'Ship of Theseus', 'Shahid' உள்ளிட்ட படங்கள் பாலிவுட் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

* படங்களை பிரபலப்படுத்தும் வகையில் வீடியோ கேம்ஸ், விளையாட்டு பொருட்கள் ஆகியவை வெளிவர ஆரம்பித்தன. ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான 'க்ரிஷ் 3' படத்திற்கு 150 ’க்ரிஷ்’ பொருட்கள் வெளியானது. 200 பொருட்கள் வெளியிட்டு 'தூம் 3' படக்குழு ’க்ரிஷ்’ சாதனையை முறியடித்தது.

* தென்னிந்திய நடிகர்கள் ராம் சரண் தேஜா, தனுஷ் மற்றும் நடிகைகள் தமன்னா, டாப்ஸி உள்ளிட்டவர்கள் இந்தி திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in