யு.டிவியிடம் ஹைவே!

யு.டிவியிடம் ஹைவே!
Updated on
1 min read

இமிதியாஸ் அலியின் 'ஹைவே' படத்தின் வெளியீட்டு உரிமையை யு.டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இந்தி திரையுலகில் இமிதியாஸ் அலி இயக்கிய படங்களை முதல் நாள் பார்த்தே ஆகவேண்டும் என்று ஒரு ரசிகர் வட்டம் உண்டு. அந்த அளவிற்கு தனது படங்களில் யதார்தத்தை கையாண்டு இருப்பார்.

'Jab we Met', 'Love Aaj Kal', 'Rockstar' போன்ற படங்களின் மூலம் பல்வேறு விருதுகளை வாரி குவித்த இமிதியாஸ், தற்போது 'ஹைவே' என்னும் படத்தினை இயக்கிவருகிறார்.

இமிதியாஸின் 'Rockstar' படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தமாகிருப்பதால், படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையை யு.டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறது. படத்தினை பிப்ரவரி 21, 2014ல் வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in