

'பி.கே' படத்தில் தான் ஏற்று நடித்துள்ள கதாப்பாத்திரம் தனது 20 ஆண்டு கால சினிமா பயணத்தில் எதிர்கொள்ளாதது என்று ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.
தான் இதுவரை நடித்ததிலேயே 'பிகே' படத்தில் ஏற்று நடித்த கதாப்பாத்திரமே சவாலானது என்று கூறியிருக்கிறார் பாலிவுட் நட்சத்திரமான ஆமிர் கான்.
ராஜ் குமார் ஹிராணி இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீசரை தீபாவளி தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 'பிகே' படத்தில் கதானநாயகனான ஆமிர் கான் பாக்கு பிரியராக நடித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியது:
"கடந்த 25 வருடங்களில் நான் நடித்த படங்காளைவிட 'பிகே' படத்திற்குதான் கடின உழைப்பை அளித்திருக்கிறேன். பிகே ஒரு பான் பிரியர். நான் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏறக்குறைய 100 பான்கள் உட்கொண்டிருப்பேன். ஒரு பான் வியாபாரி எங்களோடு படப்பிடிப்பு களத்தில் எப்போதும் இருப்பார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் ஹிராணியும் நானும் '3 இடியட்ஸ்' படத்துக்கு பின்னர் இணைந்து இயங்கி இருக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இயக்குநர் ஹிராணி இந்த படத்தை முடிக்க ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டார்.
3 இடியட்ஸ் படத்தின் இறுதி கட்டத்தின் போதே எனது அடுத்த படம் இதுவாக தான் இருக்கும் என்று இது குறித்து யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அப்போதுதான் நானும் அபிஜித்தும் (ஜோஷி) போரிவ்லீ தேசிய பூங்காவிற்கு சென்றுகொண்டிருந்தோம். அந்த சமயத்தில் தோன்றிய யோசனைத்தான் 'பிகே' படத்தின் மையக்கரு. அதற்கு பின்னர் அபிஜித் அமேரிக்கா சென்றுவிட்டார்.
அவ்வப்போது நாங்கள் பலவிதமான ஆலோசனைகளை மேற்கொள்வோம். முழுவதுமாக இந்த படத்தை முடித்து ரசிகர்கள் முன் நிறுத்த 5 வருடங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு இந்த கதையின் மூலம் அழுத்தமான கருத்தை செல்ல விரும்பியதே இதற்கு காரணம்.
அனுஷ்கா ஷர்மா இந்த படத்தின் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அவரது தோற்றம் முற்றிலும் வேற்பட்டதாக இருக்கும்" என்றார் அமிர் கான்.
தனது கதாப்பாத்திரம் குறித்து பேசிய அபுஷ்கா ஷர்மா, "'பிகே படத்தில் எனக்கு வழங்கப்பட்ட கதாப்பாத்திரம் நடிப்பதற்கு ஆர்வுமூட்டுவதாக இருந்தது. இந்த கதைக்கு ஏற்ற வகையில் நாங்கள் பலவிதமான ஆடைகள் மற்றும் விக்குகளை பயன்படுத்தி ஸ்க்ரீன் டெஸ்ட் செய்து பார்த்தோம். ஆனால் இறுதியில் ஒன்று அமைந்தது. இப்போது 'பிகே' படத்தில் எனது ஹேர்ஸ்டைல் சிறப்பாக உள்ளது என்றும், அதனை பின்பற்ற விரும்புவதாக பல பெண்கள் வந்து கூறுவதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார் அனுஷ்கா ஷர்மா.