வித்யா பாலனுக்கு பாகிஸ்தான் திரைப்படங்களில் நடிக்க அழைப்பு

வித்யா பாலனுக்கு பாகிஸ்தான் திரைப்படங்களில் நடிக்க அழைப்பு
Updated on
1 min read

தேசிய விருது பெற்ற நடிகை வித்யா பாலனுக்கு 2 பாகிஸ்தான் திரைப்படங்களில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாய்ப்புகள் குறித்து வித்யா பாலன் கூறியதாவது:

2 பாகிஸ்தானிய திரைப்படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் கதையைப் பொறுத்தே முடிவு எடுப்பேன். ‘போல்’ என்ற பாகிஸ்தானிய படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆனால் ‘காமோஷ் பானி’ என்ற படத்தை இன்னமும் நான் பார்க்கவில்லை. ஆனால் இதுவும் ஒரு சிறந்த படம் என்பதை நான் அறிவேன். உலகில் எந்த மூலையில் வேண்டுமானாலும் பணியாற்ற நான் தயாராகவே இருக்கிறேன்.

எனக்கு பாகிஸ்தான் திரைப்படங்களில் நடிக்க 2 அழைப்புகள் வந்தன. நான் அவர்களை இன்னும் சந்திக்கவில்லை. அவர்கள் என்னைச் சந்தித்து கதை விவரங்களை தெரிவிக்க விரும்புவதாகக் கூறியுள்ளனர், என்றார்.

பாகிஸ்தானிய சீரியல்களை ஒளிபரப்பும் சிந்தகி என்ற ஹிந்தி சேனலை வித்யா பாலன் பாராட்டினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in