

சஞ்சய் தத் நடனமாட இருந்த சிறைத்துறை கலை நிகழ்ச்சி, பாதுகாப்பு காரணங்கள் கருதி ரத்து செய்யப்பட்டது.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத்திற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே சஞ்சய் தத் ஒன்றரை ஆண்டுக்காலம் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால், மீதமுள்ள மூன்றரை ஆண்டுக்கால தண்டனை அனுபவிக்க மே 2013ல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைத்துறை ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சி ஒன்றில், சக கைதிகளுடன் இணைந்து நடனமாட இருந்தார் சஞ்சய் தத். இந்த செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் உற்சாகமானார்கள்.
இந்நிகழ்ச்சி புனே லேண்ட்மார்க் பல்கந்தர்வா கலையரங்கில் நேற்று நடைபெற இருந்தது. கடைசி நேரத்தல் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு நிகழ்ச்சியினை ரத்து செய்துவிட்டார்கள்.
சஞ்சய் தத்தின் திரையுலக நண்பர்கள் பலரும் இந்நிகழ்ச்சி மூலம் அவரைக் காண புனேவிற்கு கிளம்பிவந்த வண்ணம் இருந்தார்கள். நிகழ்ச்சி ரத்தானதால் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.