ஹேப்பி நியூ இயர் திரைப்படம்: ரூ.108.86 கோடி வசூல் சாதனை

ஹேப்பி நியூ இயர் திரைப்படம்: ரூ.108.86 கோடி வசூல் சாதனை
Updated on
1 min read

ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக வெளியான ‘ஹேப்பி நியூ இயர்’ பாலிவுட் திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.108.86 கோடி வசூல் செய்து ரூ.100 கோடி கிளப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

‘ஹேப்பி நியூ இயர்’ ஹிந்தியில் புள்ளிவிவரப்படி ரூ.104.10 கோடியும், தெலுங்கில் ரூ.2.92 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.1.84 கோடியும் வசூல் செய்திருக்கிறது. பாலிவுட்டில் முதல் நாள் வசூல் மட்டுமே ரூ.45 கோடியை கடந்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவின் பிளாக் பஸ்டர் படமாக வெளியாகி ரூ.500 கோடி வசூல் செய்த ஆமிர்கானின் ‘தூம் 3’ திரைப்படம் முதல் நாள் வசூல் ரூ.36 கோடியாக இருந்தது. ‘சிங்கம் ரிட்டன்ஸ்’ பாலிவுட் படம் ரூ.30.43 கோடி முதல் நாள் வசூலித்தது. சமீபத்தில் வெளிவந்த ‘பேங் பேங்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.26.52 கோடியும், வெளியான ஐந்து நாளில் ரூ.100 கோடியும் வசூலித்தது. சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கிக்’ திரைப்படம் முதல்சாதனை ரூ.35 கோடியை எட்டியது.

இந்நிலையில், தீபாவளி ரிலீஸாக வெளியாகியுள்ள ‘ஹேப்பி நியூ இயர்’ திரைப்படம் முதல் நாள் ரூ.45 கோடி வசூலால் சமீபத்திய பாலிவுட் படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இந்த மெகா பாக்ஸ் ஆபிஸ் வெற்றி குறித்து தயாரிப்பு தரப்பில், இந்த மைல்கல் வெற்றிக்கு துணை நின்ற பங்குதாரர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகி முதல் வாரத்தில் ரூ.108 கோடியை கடந்து வசூலை குவித்துள்ள ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் வெற்றியை ஆமிர்கான் நடிப்பில் டிசம்பரில் வெளிவரவிருக்கும் ‘பிகே’ திரைப்படம் முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு தற்போதைய பாலிவுட் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in