

மிக குறைந்த நாட்களில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது 'க்ரிஷ் 3'.
ரித்திக் ரோஷன், ப்ரியங்கா சோப்ரா, விவேக் ஒபராய், கங்னா ரணாவத் மற்றும் பலர் நடிக்க ராகேஷ் ரோஷன் தயாரித்து, இயக்கியிருந்தார். 'க்ரிஷ்' பட வரிசையில் வெளிவரும் மூன்றாம் பாகம் என்பதால் பெரும் இந்தியளவில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
படமும் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலை வாரிக் குவித்து வந்தது. பல்வேறு சாதனைகளை இப்படம் தொடர்ச்சியாக செய்து வருகிறது.
ஒரே நாளில் 35.91 கோடி செய்து, ஒரே நாளில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' சாதனையை முறியடித்திருக்கிறது.
தற்போது மிகக் குறைந்த நாட்களில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' திரைப்படம் 70வது நாளில் தான் 200 கோடி வசூலை கடந்தது. ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படம் 15வது நாளில் தான் 200 கோடி வசூலை கடந்தது.
ஆனால், ’க்ரிஷ் 3’ திரைப்படம் வெளியான 10 வது நாளில் 200 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. இப்படத்தின் வசூல், ’சென்னை எக்ஸ்பிரஸ்’ சாதனையை முறியடிக்கும் என்று திரையுலக விமர்சகர்கள் கணித்துள்ளனர்.