மண்ட்டோ படத்தின் முதல் காட்சி ரத்து: மனவருத்தத்தில் நந்திதா தாஸ்

மண்ட்டோ படத்தின் முதல் காட்சி ரத்து: மனவருத்தத்தில் நந்திதா தாஸ்
Updated on
1 min read

'மண்ட்டோ' திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் மும்பை தியேட்டர் ஒன்றில் திரையிடலுக்குத் தயாரான முதல் காட்சியே ரத்தானதால் நந்திதா தாஸ் மிகப்பெரிய மனவருத்தத்துக்கு தள்ளப்பட்டார்.

பாலிவுட் கலைஞரான நந்திதா தாஸ் 'அழகி' (2002), நீர்ப்பறவை (2012) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

புகழ்பெற்ற உருது எழுத்தாளர் சதக் ஹசன் மண்ட்டோவின் வாழ்க்கைக் கதையை நந்திதா தாஸ் திரைப்படமாக இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் மண்ட்டோவாக தோன்றி நடித்துள்ளார். இப்படத்தை எச்பி ஸ்டூடியோஸ் பிலிம்ஸ்டாக் நிறுவனம் தயாரித்திருந்தது.

'மண்ட்டோ' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மும்பையின் பிரபல திரையரங்கமான பிவிஆர் சினிமாஸில் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், திடீர் தொழில்நுட்பக் கோளாறு  காரணமாக பாலிவுட் நகரத்தின் பிரபல திரையரங்கில் முதல் காட்சியே ரத்தாகியுள்ளது. இதனால் இயக்குநரும் நடிகையுமான நந்திதா தாஸ் மிகவும் வருத்தத்திற்கு ஆளானார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

''மிகப்பெரிய மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. பல மனிதர்களை ஒருங்கிணைத்து ஆறு ஆண்டுகள் கடும் உழைப்பை அர்ப்பணிப்போடு செலுத்தி இன்று காலை ரசிகர்கள் அதை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை அறிய விரும்பும் ஒரு உச்சகட்டமான தருணத்திற்காக காத்திருந்தேன்.

@Viacom18Movies உத்தரவாதம் தந்துள்ளது. மீண்டும் பகல் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஒருவேளை அக்காட்சியும் இல்லையெனில் எனக்குத் தெரியப்படுத்துங்கள். எனினும் #Mantoiyat பரவுவதை தடுக்கமுடியாது.''

இவ்வாறு நந்திதா தாஸ் பதிவிட்டுள்ளார்.

பிவிஆர் சினிமாஸ் பதிவு

இதுகுறித்து பிவிஆர் சினிமாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்விதமாக பகிர்ந்துள்ள தகவல் வருமாறு:

"ஹாய், சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக, 'மண்ட்டோ' திரைப்பட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்று நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.

இருப்பினும், ஒரு நல்ல படத்திலிருந்து நீங்கள் வெளியேற வேண்டும் என விரும்ப மாட்டோம், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரையிடல் நிகழ்ச்சிகளை விரைந்து உங்களுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறோம்.

தொடர்ந்து புதிய தகவல்களுக்காக பிவிஆர் சினிமாவின் ஆப்களில் / இணையத்தில் இணைந்திருங்கள்'' என்று ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பிவிஆர் அதிகாரபூர்வ ட்டவிட்டர் தளத்தில் ''திரைப்படம் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பிவிஆர் திரைப்பட சங்கலித் தொடரோடு விளையாடுங்கள்'' என்று உற்சாகமாக பதிவிட்டுள்ளது.

ரஸிகா துகால் மற்றும் தஹிர் ராஜ் பாசின் ஆகியோர் நடித்துள்ள 'மண்ட்டோ' திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு சென்னையிலும் இன்று ரிலீசாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in