

சுயநலம் எனும் வார்த்தையை ஒருவர் தனது உடல்நலத்தில் காட்ட வேண்டிய அக்கறை என்று மாற்றிக்கொள்ளலாம் என்கிறார் நடிகை மனீஷா கொய்ராலா. “மனிதர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள். உணர்வுபூர்வமான விஷயங்கள், நம்மைச் சோர்வடைய வைக்கின்றன. உடலளவிலும் அதன் பாதிப்பு வெளிப்படுகிறது. எனவேதான், ஒருவர் தனக்குத்தானே முக்கியத்துவம் கொடுத்துக்கொள்வதில் தவறில்லை” என்கிறார். 2012 முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மனீஷா, அது ஏற்படுத்திய பாதிப்பையும் வெற்றிகரமாக அதை அவர் எதிர்கொண்டுவரும் விதத்தையும் புத்தகமாக எழுதத் திட்டமிட்டிருக்கிறார்.