ரியல் VS ரீல்: ரன்வீர் சிங் மனைவியாக தீபிகா

ரியல் VS ரீல்: ரன்வீர் சிங் மனைவியாக தீபிகா
Updated on
1 min read

1983 உலகக்கோப்பையை இந்தியா வென்றதை முன்னிலைப்படுத்தி உருவாகும் படத்தில் ரன்வீர் சிங் மனைவியாக தீபிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

1983-ல் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற்ற கதையைச் சொல்லும் ‘83' திரைப்படத்தில் ரன்வீர் சிங், இந்திய அணியின் அன்றைய கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரன்வீரின் மனைவி தீபிகா படுகோன், திரைப்படத்தில் கபில் தேவின் மனைவியான ரோமி தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தீபிகா - ரன்வீர் ஜோடிக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர். இருவரும் நடித்த 'பத்மாவதி' திரைப்படத்தில் கூட இருவரும் இணைந்து நடிக்கும்படியான காட்சிகள் இல்லை. தற்போது ‘83' படம் மூலம் இருவரையும் ஒன்றாகத் திரையில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.

‘83’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இதற்காக ரன்வீர் முழு வீச்சில் தயாராகிவருகிறார். லக்‌ஷ்மி அகர்வாலின் வாழ்க்கைக் கதையான 'சப்பாக்' படப்பிடிப்பு முடிந்ததும், தீபிகா ’83’ படப்பிடிப்பில் இணையவுள்ளார். 'சப்பாக்' படப்பிடிப்பினால் அதிகமாக சோர்வடைந்திருந்ததால் ஆரம்பத்தில் தீபிகா சற்று தயக்கம் காட்டினார் என்றும், பின் '83' இயக்குநர் கபீர்கானிடம் பேசி படப்பிடிப்புக்கான தேதிகளை திட்டமிட்டதும் ஒப்புக்கொண்டார் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in