சகோதரியிடம் கனிவாக இல்லையே - ஹ்ரித்திக்கை சீண்டும் கங்கணா சகோதரி

சகோதரியிடம் கனிவாக இல்லையே - ஹ்ரித்திக்கை சீண்டும் கங்கணா சகோதரி
Updated on
1 min read

பாலிவுட் பிரபலங்களை அவ்வபோது வம்புக்கு இழுத்து பேசி சண்டையிடுவதையோ  அல்லது சர்ச்சைக் கருத்துகள் கூறுவதையோ வழக்கமாகக் கொண்டிருப்பவர் நடிகை கங்கணா ரணவத்தின் சகோதரி ரங்கோலி. தற்போது நடிகர் ஹ்ரித்திக் ரோஷனை சீண்டி ட்வீட் செய்துள்ளார். 

தான் கட்டிக்கொண்டிருக்கும் வீடு பற்றியும், அதை வடிவமைக்கும் பொறுப்பை தன் சகோதரி கங்கணா எடுத்துக்கொண்டதைப் பற்றியும், அதில் அவர் காட்டும் ஈடுபாடு பற்றியும் பெருமையுடன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் ரங்கோலி.

அப்போது ஒருவர், எல்லாருக்கும் அவர்களின் சகோதர சகோதரிகள் பிடிக்கும், அவர்களுக்கு என்ன முடியுமோ செய்வார்கள், இதிலென்ன புதிதாக சொல்ல இருக்கிறது என்று கருத்துப் பதிவிட, அதற்கு ரங்கோலி ஹ்ரித்திக் ரோஷனை வம்புக்கிழுத்துள்ளார்.

"எல்லோரும் அவர்கள் உடன் பிறந்தவர்களுடன் கனிவாக நடந்துகொள்வதில்லை. ஹ்ரித்திக்கின் சகோதரி சுனைனா கங்கணாவுக்கும், ஹ்ரித்திக்குக்கும் நடந்த பிரச்சினையில் கங்கணாவின் பக்கம் பேச முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்க, என்னிடமும், கங்கணாவிடமும் பேச தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

இதனால் சுனைனாவுக்கு மனநல ரீதியிலான பாதிப்பு இருக்கிறது என்பதை நிரூபிக்க ஹ்ரித்திக் முயற்சித்தார். பாவம் அந்தப் பெண் பொதுவில் அசிங்கப்பட்டார். இது ஊடகங்கள் அனைத்திலும் வந்ததே. எனவே எல்லோரும் அவர்கள் உடன் பிறந்தவர்களிடம் கனிவாக இருப்பார்கள் என்று சொல்லாதீர்கள்" என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

சமீபத்தில்தான், சுனைனாவுக்கு பை போலார் குறைபாடு இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் சுனைனா ட்விட்டரில் தனது புகைப்படத்தைப் பகிர்ந்து, நான் பாதிக்கப்பட்டவள் போலவா இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in