

பிகினி உடையணிந்ததற்காக தன்னை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தவர்களுக்கு நடிகை ராதிகா ஆப்தே பதிலடி கொடுத்தார்.
நடிகை ராதிகா ஆப்தே கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். இவர் சமீபத்தில், நண்பர்களுடன் கோவாவுக்கு சென்றபோது, கடற்கரையில் பிகினி உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்தார்.
இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்தனர். இதுகுறித்து பத்திரிக்கையொன்றுக்கு ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில், “பிகினி உடையணிந்ததற்காக என்னை கிண்டல் செய்பவர்கள், நான் பீச்சில் சேலை அணிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றார்களா?” என பதிலடி கொடுத்தார்.
சமீபகாலமாக, நடிகைகள் பிகினி உடையணிவதற்காக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. நடிகை சமந்தா சமீபத்தில் பிகினி உடையணிந்ததற்காக விமர்சனம் செய்யப்பட்டார்.
அப்போது நெட்டிசன்கள் பலரும் “திருமணத்திற்கு பின் பிகினி உடையணிவதா?” என கேள்வி எழுப்பினர். அதற்கு சமந்தா “நான் என்ன செய்ய வேண்டுமென்ற விதியை நான் பார்த்துக்கொள்கிறேன். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்” என பதில் அளித்தார்.