

சிரஞ்சீவியுடன் 'சை ரா நரசிம்ம ரெட்டி' படத்தில் பணியாற்றுவது பெருமையளிக்கிறது என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
'சை ரா நரசிம்ம ரெட்டி' தெலுங்கு திரைப்படத்தில் ஒரு கவுரவ வேடம் ஏற்று நடித்துவரும் அமிதாப் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
'' 'சையீரா! நரசிம்ம ரெட்டி', சிரஞ்சீவிகாருவுடன் பணியாற்றுவது பெருமையளிக்கிறது (மெகா ஸ்டாருடன் பணியாற்றுவது மரியாதைக்குரியது) என்று படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை சிரஞ்சீவியுடன் இணைத்து மேற்கோள் காட்டியுள்ளார்.
அமிதாப் பச்சன் தற்போது ஹைதராபாத்தில் தங்கி படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். நரசிம்ம ரெட்டி திரைப்படத்தை ராம்சரண் தயாரிக்க, சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.
சுதரந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
விரைவில் வெளியாக உள்ள '102 நாட்அவுட்' பாலிவுட் திரைப்படத்தில் அமிதாப்பைக் காண இந்தித் திரையுலகம் காத்திருக்கிறது.