

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அமிதாப் பச்சனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’. அமிதாப் பச்சன், ஆமிர் கான், கத்ரினா கைஃப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ‘கன்ஃபெசன்ஸ் ஆஃப் எ தக்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆதித்யா சோப்ரா இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.
ஆக்ஷன் அட்வென்ச்சர் படமான இதன் படப்பிடிப்பு தற்போது ஜோத்பூரில் நடைபெற்று வருகிறது. இன்று படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார் அமிதாப் பச்சன். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.