

கோட்சே குறித்த கமலின் பேச்சுக்கு நடிகர் விவேக் ஓபராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நேற்று (12.05.2019) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது,
"இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார்.
இந்நிலையில் கமலின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கருத்து தெரித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,
”அன்புள்ள கமல் சார், நீங்கள் ஒரு சிறந்த கலைஞர். கலைக்கு எப்படி மதம் கிடையாதோ அதே போல தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது. கோட்சேவை நீங்கள் தீவிரவாதி என்று சொல்லலாம் ஆனால் ஏன் ‘இந்து’ என்பதை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.? நீங்கள் வாக்கு சேகரிப்பது முஸ்லிம்கள் வாழும் பகுதி என்பதாலா?
ஒரு பெரிய கலைஞர் ஒரு நடிகனின் வேண்டுகோள் இது. தயவுசெய்து இந்த நாட்டை பிரிக்க வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றுதான்.. ஜெய்ஹிந்த்.”
இவ்வாறு விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ’பிம் நரேந்திர மோடி’ படத்தின் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு தீவிர பாஜக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.