திரைப்படமாகும் கணித மேதை சகுந்தலா தேவியின் கதை: வித்யாபாலன் நடிக்கிறார்

திரைப்படமாகும் கணித மேதை சகுந்தலா தேவியின் கதை: வித்யாபாலன் நடிக்கிறார்
Updated on
1 min read

கணித மேதை சகுந்தலா தேவி, தனது ஐந்தாவது வயதில், 18 வயது மாணவர்களுக்கான கணிதத்தைத் தீர்த்து வைத்தவர். அதிவேகமாக சிக்கலான கணக்குகளைப் போடுவதில் வல்லவர். மனித கம்ப்யூட்டர் என்று போற்றப்படுபவர். அவரது வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது. இதில், சகுந்தலா தேவியாக வித்யாபாலன் நடிக்கிறார். அடுத்த ஆண்டு (2020) கோடையில் படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படம் பற்றி பேசியுள்ள வித்யாபாலன், "மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் சகுந்தலா தேவியின் கதாபாத்திரத்தை பெரிய திரையில் நடிப்பதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். தனது தனித்துவத்தைப் போற்றி, வலுவான பெண்ணியக் குரலாக இருந்து, வெற்றியடையும் வழியில் பலரது விமர்சனங்களையும் தைரியமாகக் கடந்து வந்தவர்.

வழக்கமாக கணிதம் போடுபவர்கள் ஜாலியாக இருக்க மாட்டார்கள் என்று நினைப்போம். ஆனால், அவர் அந்த எண்ணத்தையே மாற்றியுள்ளார். தேசத்தில் பலருக்கும் உத்வேகம் தரும் ஒரு பெண்மணியின் கதையை, திரைக்குக் கொண்டு வருவதில் எங்கள் அனைவருக்கும் பெருமை. ஒரு கணித மேதை, மனித கம்ப்யூட்டர், உலகையே ஆச்சரியப்பட வைத்தவர், இந்தியாவின் சிறிய நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்" என்று கூறியுள்ளார்.

அனு மேனன் இந்தப் படத்தை இயக்குகிறார். வித்யாவைவிட வேறு யாரும் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமில்லை என அனு மேனன் கூறியுள்ளார். படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in