

‘மெட் கலா’ நிகழ்ச்சியில் தனது மேக்கப்பால் இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
மெட்ரோபாலிடன் கலை அருங்காட்சியகத்துக்குச் சொந்தமாக நியூயார்க்கில் இயங்கும் கல்வி நிறுவனத்துக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ‘மெட் கலா’. பெரிய நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி இது. இதற்கான அழைப்பிதழ் வந்தால் மட்டுமெ கலந்துகொள்ள முடியும்.
2019-ம் ஆண்டுக்கான ‘மெட் கலா’, நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் நிக் ஜோன்ஸ், தனது மனைவி பிரியங்கா சோப்ராவுடன் கலந்து கொண்டார். இந்தியாவிலிருந்து இவர்கள் இருவரைத் தவிர தீபிகா படுகோனும் கலந்து கொண்டுள்ளார்.
ஒவ்வொருவருமே வித்தியாசமான முறையில் உடைகள் அணிந்து புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம். அவ்வாறு பிரியங்கா சோப்ரா போட்ட வித்தியாசமான மேக்கப் இணையத்தில் கடுமையான கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
பலரும் அவரது முடிக்கான மேக்கப்பை யோகி பாபுவின் தலைமுடியுடன் ஒப்பிட்டுக் கிண்டல் செய்து வருகின்றனர். இதனை பாடகர் ஸ்ரீனிவாஸ் ‘யோகி பாவுக்கு ஒரு போட்டியாளர்’ என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆனால், தீபிகா படுகோன் உடைகளை யாரும் கிண்டல் செய்யவில்லை. பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்களைக் கொண்டு மீம்ஸ்களும் உருவாக்கியுள்ளனர்.