கிண்டலுக்கு ஆளான பிரியங்கா சோப்ரா அலங்காரம்: உடையை உருவாக்க 1,500 மணி நேரம்- வீடியோ வெளியீடு

கிண்டலுக்கு ஆளான பிரியங்கா சோப்ரா அலங்காரம்: உடையை உருவாக்க 1,500 மணி நேரம்- வீடியோ வெளியீடு
Updated on
1 min read

'மெட் கலா' ஃபேஷன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சிகை அலங்காரம் கடுமையான கிண்டலுக்கு ஆளான நிலையில், அவரின் ஆடையை உருவாக்க 1,500 மணி நேரங்கள் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெட்ரோபாலிடன் கலை அருங்காட்சியகத்துக்குச் சொந்தமாக நியூயார்க்கில் இயங்கும் கல்வி நிறுவனத்துக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ‘மெட் கலா’. பெரிய நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி இது. இதற்கான அழைப்பிதழ் வந்தால் மட்டுமெ கலந்துகொள்ள முடியும்.

அண்மையில் 2019-ம் ஆண்டுக்கான ‘மெட் கலா’, நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் ஒவ்வொருவருமே வித்தியாசமான முறையில் உடைகள் அணிந்து புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம்.

இதில் இந்தியாவில் இருந்து பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் கலந்து கொண்டார். அவ்வாறு பிரியங்கா சோப்ரா போட்ட வித்தியாசமான மேக்கப் இணையத்தில் கடுமையான கிண்டலுக்கு ஆளாகியது. பலரும் அவரது முடிக்கான மேக்கப்பை யோகி பாபுவின் தலைமுடியுடன் ஒப்பிட்டுக் கிண்டல் செய்தனர். அதேபோல சந்தனக் கடத்தல் வீரப்பனின் மீசையோடும் பிரியங்காவின் முடி ஒப்பிடப்பட்டது. அவர் குறித்து ஏராளமான மீம்ஸ்களும் பதிவுகளும் உலா வந்தன.

இந்நிலையில், மெட் கலா விழாவில் அவர் அணிந்திருந்த கவுனை உருவாக்க 1,500 மணி நேரம் ஆன தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஷன் உலகில் புகழ்பெற்றவரும் இந்த ஆடையை உருவாக்கியவருமான டயர் இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோ

டயர் ஸ்பிரிங் 2018 கலெக்‌ஷன் என்ற பெயரில் இந்த கவுன் உருவாக்கப்பட்டது. இதில் எப்படி சிறகுகள் பயன்படுத்தப்பட்டன? நீலமான இளஞ்சிவப்பு நிறம், சாம்பல் நிறம், சிவப்பு நிறம் ஆகியவை எப்படி கொண்டுவரப்பட்டன உள்ளிட்ட தகவல்கள் இந்த வீடியோவில் விவரிக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in