ஜெயலலிதாவாக நடிப்பதில் பெருமை: கங்கணா ரணாவத் மகிழ்ச்சி

ஜெயலலிதாவாக நடிப்பதில் பெருமை: கங்கணா ரணாவத் மகிழ்ச்சி
Updated on
1 min read

தமிழ்த் திரைப்பட இயக்குநர் விஜய் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜெயலலிதாவாக நடிப்பதில் பெருமிதம் அடைவதாக பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் 'தலைவி' என்ற பெயரில் தமிழில் தயாராகிறது.இப்படத்தை 'மதராசப்பட்டினம்', 'தெய்வத் திருமகள்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய தமிழ்த் திரைப்பட இயக்குநர் விஜய் இயக்குகிறார்.

இப்படத்தையே ஒரே நேரத்தில் பாலிவுட்டிலும் இயக்கி வருகிறார் விஜய். பாலிவுட்டில் இத்திரைப்படத்திற்கு 'ஜெயா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் கூறுகையில், "இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெண் ஜெயலலிதா ஜி. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். பின்னர் அவர் ஒரு பிரபலமான அரசியல்வாதியாகவும் மாறினார். இதையே 'ஜெயா' திரைப்படம் பேசுகிறது. பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் நான் ஜெயலலிதா ஜியாக நடிப்பது மகிழ்ச்சியாக உளளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் எனக்கும் முக்கியப் பங்கு இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன்'' என்று கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் விஜய் தெரிவிக்கையில்,"ஜெயலலிதா மேடம் எங்கள் மாநிலத்தில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரது வாழ்க்கையை ஒரு படமாகத் தயாரிப்பது ஒரு பெரிய பொறுப்பாகும். நாங்கள் அத்திரைப்படப் பணிகளை மிகவும் கவனமாகவும் நேர்மையாகவும் செய்யப் போகிறோம்.

எங்கள் மாபெரும் தலைவரின் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் தோன்றும் கங்கணாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in