

'PM Narendra Modi' பயோபிக் படத்தில் நான் எந்தப் பாடலும் எழுதவில்லை என்று பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியர் ஜாவத் அக்தர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்க்கை ’PM Narendra Modi’ என்று பாலிவ்ட்டில் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஓமங் குமார் இயக்க, இதில் விவேக் ஒபராய் மோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றில் பாடலாசிரியர்கள் பெயரில் இந்தியின் பிரபல பாடலாசிரியான ஜாவித் அக்தர் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஆனால், தான் இந்தப் படத்துக்கு எந்தப் பாடலையும் எழுதவில்லை என்று ஜாவித் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்தது.
இதுகுறித்து ஜாவத் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இத்திரைப்பட போஸ்டரில் எனது பெயர் இருப்பதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இப்படத்துக்கு நான் எந்தப் பாடலையும் எழுதவில்லை'' என்று பதிவிட்டுள்ளார்.