ஆஸ்கார் வென்ற ’பீரியட் என்ட் ஆப் சென்டன்ஸ்’: பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து

ஆஸ்கார் வென்ற ’பீரியட் என்ட் ஆப் சென்டன்ஸ்’: பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து
Updated on
1 min read

ஆஸ்கர் வென்ற இந்தியாவின் ’பீரியட் என்ட் ஆப் சென்டன்ஸ்’ திரைப்படத்துக்கு இந்திய பாலிவுட்  பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் இந்தியாவின் ஆவண குறும்படமான பீரியட் என்ட் ஆப் சென்டன்ஸ் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.

இந்தப் படம் இந்தியவைச் சேர்ந்த குனித் என்பவரின்  சிக்யா நிறுவனம் தயாரிக்க  ஈரான் - அமெரிக்கரான ராக்ஹியா இயக்கி உள்ளார். இந்தப்படம் தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் திரைப்படம் ஆஸ்கார் விருது வென்றதற்கு இந்திய பாலிவுட் பிரபலங்கள் பல தங்கள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

பிரியங்கா சோப்ரா: இந்த மாலை பொழுதில் சிறப்பான நினைவுகள், படக்குழுவுக்கு எனது பாராட்டுகள், பயம் இல்லாத நண்பர் குனித் மோங்கா...

அக்‌ஷய் குமார்: ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள். விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு... வெற்றி பெற தகுதியானவர்கள்.

அனுபம் கெர்: ஜெய் ஹோ... குழுவுக்கு வாழ்த்துகள்... மாதவிடாய்யை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்திய படம் ஆஸ்கார் வென்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in