

அலியா பட்டை கங்கணா ரணாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கீரிஷ் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் 'மணிகர்ணிகா' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கங்கணா, அலியா பட்டை விமர்சித்துள்ளார்.
முன்னதாக, 'ராஸி' படம் வந்தபோது அலியா அவர் படத்தைக் காணுமாறும், படத்தைப் பற்றி கருத்து தெரிவிக்குமாறும் என்னிடம் கூறினார். ஆனால் என் படம் வரும்போது அவர் வாய் திறக்கவில்லை. அவர் கரண் ஜோஹரின் கைப்பாவையாக இருக்கிறார் என்று கங்கணா ரணாவத் விமர்சித்தார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கங்கணா கூறும்போது, ''என்னுடைய படங்களை பிற நடிகர்கள் விளம்பரப்படுத்துவதால் என் படத்துக்கு எந்தப் பலனும் இல்லை. என் 33 வயதில் ஏற்கெனவே மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ளேன். அவர்கள் தங்களை வெற்றிகரமாக பிரபலப்படுத்திக் கொள்வதுதான் அவர்களுக்கான மிகப் பெரிய வெற்றி'' என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அலியா பட், கங்கணா ரணாவத்திடம் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.